கேளிக்கை

இந்தியன் 2 படத்தில் அபிஷேக் பச்சன்?

(UTV|INDIA)-‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். சிம்பு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிப்பதாகவும், சித்தார்த் ஜோடியாக காஜல் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அத்துடன் வில்லனாக அபிஷேக் பச்சனை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வில்லன் கதாபாத்திரத்திற்கு அஜய் தேவ்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் அக்‌ஷய் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அக்‌ஷய் குமார் சில நிபந்தனைகளை விதிக்க, அபிஷேக் பச்சன் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ஓரிரு வாரத்தில் இங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு கமல்ஹாசன் உள்ளிட்ட பட குழுவினர் வெளிநாட்டுக்கு செல்கின்றனர். அங்கு 2 மாதங்கள் தொடர்ச்சியாக 8 நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

 

Related posts

தேவ் படத்திற்கு போட்டியாக களத்தில் இறங்கும் பிரபல நடிகர், நடிகையின் படம்!

ஆஸ்கர் விருது வழங்கும் விழா – 2021

ஜோதிகா நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு இதோ…