சூடான செய்திகள் 1வணிகம்

இந்தாண்டில் ,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டில் , நான்கு சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் ஜனவரி மாதத்துக்கான உலக பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையில் வங்கி இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்தாண்டு விவசாய மற்றும் சேவைகள் துறையில் ஏற்பட்டிருந்த வளர்ச்சியின் அடிப்படையில், பொருளாதார வளர்ச்சி மூன்று தசம் ஒன்பது சதவீதமாக பதிவாகி இருந்தது. இந்தநிலையில் நடப்பாண்டில் நான்கு தசம் ஒரு சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என, உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்

கனிய மணல் நிறுவனத்தின் 60 வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

8.4 சதவீதமாக குறைவடைந்துள்ள பணவீக்கம்