உலகம்

இத்தாலியில் மே 4 ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படும்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில், அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை விரைவில் தளர்த்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் இத்தாலியில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

மக்கள் முகக்கவசங்களோடு வெளியில் செல்லலாம் எனவும், பாடசாலைகள் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இதுவரை 26, 644 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குவைட் சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

உலகின் மிக சக்தி வாய்ந்த ஆயுதம்

மீண்டும் ஏவுகணை சோதனையில் இறங்கிய வடகொரியா