அரசியல்உள்நாடு

இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நாட்டை வந்தடைந்தார்

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi) இன்று (03) நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இலங்கையின் பல உயர் மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

சுமார் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயமாக இது கருதப்படுகின்றது.

தமது விஜயத்தின் போது, ​​பிரதி அமைச்சர் த்ரிபோடி, இலங்கை-இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் தொடக்க அமர்வில், வௌிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடன் இணை தலைமை தாங்கவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1952 இல் நிறுவப்பட்டது.

பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி பிரதமர் வைத்தியர் ஹரிணி அமரசூரியவை சந்திப்பதுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது

editor

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 739 பேர் கைது

ஐ.ம. சக்தியின் பாராளுமன்ற  குழு கூட்டம் இன்று