உள்நாடு

இதுவரை 2,564 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 23 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2,564 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,839 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 264 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மோட்டார் சைக்கிள் பந்தயம் – இளைஞர்கள் குழு கைது

“முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை”நீதிமன்றத்திற்கு உறுதிமொழி

நாமலின் மின் கட்டணத்தை செலுத்திய சனத் நிஷாந்த!