உள்நாடு

இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தினை கடந்தது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை 509,275 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 42,925 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

40 MPக்களுடன் எதிர்க்கட்சியில் அமர போகும் நாமல்!

பிரசன்ன ரணவீரவுக்கு உதவி பிரதம கொறடா பதவி

சாந்தனுக்கு கிளிநொச்சியில் பிரத்தியேக இடத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!