உள்நாடு

இதுவரையில் 3,043 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(16) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,043 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,271 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவு

editor