உள்நாடு

இதுவரையில் 2,927 கொரோனா நோயாளிகள் அடையாளம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,927 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துருக்கியில் இருந்து வருகை தந்த ஒருவர், சென்னையில் இருந்து வருகை தந்த ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 6 பேர் ஆகியோரே இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 2,789 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது 127 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேங்காய்க்கு தட்டுப்பாடு – தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது

editor

ஹஜ் யாத்திரைக்கு சென்ற 2 இலங்கையர்கள் மரணம்!

தேசத்துரோக போர்ட் சிட்டி சட்டத்திற்கு எதிராக SJB ஆர்ப்பாட்டம்