சூடான செய்திகள் 1

இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக,  தெரிவித்துள்ளது.

குவைத் தூதரகத்தின் இணையத்தளம் உள்ளிட்ட நாட்டின் 13 இணையத்தளங்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி இந்தத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு மென்பொருளொன்று அறிமுகப்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

 

Related posts

பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதியின் காலம்: அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்

கடற்படையின் புதிய கடற்படை தளபதி நியமிப்பு…