அரசியல்உள்நாடு

இணைந்து போட்டியிட்டதால் சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்குமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய ஜனநாயக முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டதால், தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியுடன் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியில் எழுந்துள்ள தேசியப் பட்டியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (22) பிற்பகல் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கட்சியின் செயற்குழு மற்றும் அரசியல் சபையின் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

14 வயது சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண்

editor

ஜனாதிபதி அநுர கடந்த 6 மாதங்களில் எவ்வித சேவையும் செய்யவில்லை – நாமல் எம்.பி

editor

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!