உள்நாடு

இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

(UTV | கொழும்பு) – புனானை – வெலிகந்தவுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக கடந்த 27 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

இதேவேளை, கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சேவையில் ஈடுபடும் பொடி மெனிக்கே ரயில் இன்று (29) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புத்தளம் ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை முதல் அந்தப் பாதையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.

Related posts

ஹெரோயினுடன் சிறைக் காவலாளர் ஒருவர் க‍ைது

Astra Zeneca தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம்

கொழும்பில் 27 இடங்கள் அடையாளம்