உள்நாடு

இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு

(UTV | கொழும்பு) – இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்வதற்காக பிரசன்ன ரணதுங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றில் கையளித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 25 மில்லியன் ரூபா பெறுமதியான உறுதிமொழித் தாள்களை பலவந்தமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பிரசன்ன ரணதுங்கவிற்கு ஐந்து வருடங்கள் இடைநிறுத்தப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மற்றும் மற்றொரு சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியை அவசரமாக சந்தித்த ஹரீஸ் – நடந்தது என்ன ?

ஷானி – அநுர தனித்தனியாக ரீட் மனுத்தாக்கல்

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்த சூழ்ச்சி – மஹிந்த ராஜபக்ஷ

editor