சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டில் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வளிமணடலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட்ள்ளது.

ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் ,தென், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

Related posts

எகிப்துக்கும் இலங்கைக்குமிடையிலான நெருக்கமான உறவு நீண்டகால பாரம்பரியம் கொண்டது

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]

சீரான வானிலை….