சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

 

 

 

 

Related posts

ஹஜ் யாத்திரைக்கு சென்ற 2 இலங்கையர்கள் மரணம்!

அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயம்

தயாசிரி ஜயசேகர தமது கடமைகளை பொறுப்பேற்றார்