உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – வெளியான அறிவிப்பு

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வளிமண்டலநிலை ஏற்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் லேசான மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை 🇱🇰!

வசந்த யாப்பா எம்.பி பதவி விலகல்

மு.கா முக்கியஸ்தர்கள் – இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

editor