உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – பலத்த காற்றும் வீசும்

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதோடு, நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வௌியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அத்திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

VAT மற்றும் உள்நாட்டு வருவாய் மசோதாக்களுக்கான 10 மனுக்கள்

பெஞ்​சல் புயல் இன்று மாலை கரையைக் கடக்கலாம் – அனைத்து விமான சேவைகளும் ரத்து – சென்னை வானிலை ஆய்வு மையம்

editor

பாடசாலைகளின் தேவைகள் நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor