உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை – பலத்த மின்னல் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மேல், தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் – திஸ்ஸ அத்தயநாயக்க எச்சரிக்கை

editor

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி