உள்நாடு

இசை நிகழ்ச்சியில் 31 இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 31 இளைஞர், யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நேற்று (01) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த இளைஞர்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

500க்கும் மேற்பட்டோர் இசை நிகழ்ச்சிக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மிரிஹான குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களிடம் இருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று

நவம்பர் 1ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

ஆபத்து நிறைந்த மரங்களை அகற்ற நடவடிக்கை