உள்நாடுவிளையாட்டு

இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இன்று (23) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சரித் அசலங்க 45 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

அதற்கமைய 220 என்ற வெற்றியிலக்கை நோக்கி இங்கிலாந்து அணி துடுப்பாடியது.

இங்கிலாந்து அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 75 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஹரி புரூக் 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா மற்றும் ஜெப்ரி வெண்டர்ஸே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமனிலைப் பெற்றுள்ளன.

Related posts

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் – சஜித் பிரேமதாச

editor

UTV வாசகர்களுக்கு இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள் [VIDEO]

ஆறு அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியமைக்கு ஜனாதிபதிக்கு தமிழ் கட்சிகள் பாராட்டு