விளையாட்டு

இங்கிலாந்து அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – ஐசிசி சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி எட்டு விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

இந்தப் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் ஆறு விக்கட் ,ழப்பிற்கு 305 ஓட்டங்களை எடுத்திருந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் 128 ஓட்டங்கள். முஸ்பிக்குர் ரஹீம் 78 ஓட்டங்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ,ங்கிலாந்து வீரர்கள் 48 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை தாண்டினார்கள் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களையும், அலெக்ஸ் ஹேல்ஸ் 95 ஓட்டங்களையும், இஜோன் மோர்கன் 75 ஓட்டங்களையும் எடுத்தார்கள்.

இன்று அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் நான்கு மணிக்கு ஆரம்பமாகும்.

Related posts

சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது

கொழும்பு கிங்ஸ் அணியை வீழ்த்தி காலி அபார வெற்றி

இலங்கை அணியின் புதிய பயிற்சிவிப்பாளர் நியமனம்!