வகைப்படுத்தப்படாத

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்

(UTV|AUSTRALIA) ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை கொட்டுவதால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து விட்டது.

இதனால் குயின்ஸ்லேண்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள டவுன்ஸ்வில் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.

வீடுகள் மற்றும் தெருக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கி தவித்தன.

மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஆற்றில் இருந்து வெள்ளம் சீறிப் பாய்கிறது. அதை தடுத்து நிறுத்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

குயின்ஸ்லேண்ட் பகுதியில் இது போன்ற வெள்ளம் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது.

 

 

 

 

Related posts

Brazil beat Argentina in Cope Semi-Final

நர்ஸ் செய்து வந்த காரியம்

அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி