உலகம்

ஆழ் கிணற்றில் வீழ்ந்த ‘ரயான்’ : மீட்புப் பணிகள் தொடர்கிறது

(UTV |  மொரோக்கோ) – மொரோக்கோவில் 32 மீற்றர் ஆழக் கிணற்றில் விழுந்த சிறுவனைக் காப்பாற்றும் முயற்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

ரயான் என்ற பெயர் கொண்ட 5 வயதுச் சிறுவன் பாப் பெர்ரட் எனும் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தில் தோண்டப்பட்டிருந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டான்.

சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிலையில் கடந்த 5 நாட்களாக மீட்புப் படையினர் சிறுவனை மீட்கப் போராடி வருகின்றனர். மிகக் குறுகலான கிணற்றின் அடியை எட்டுவது சிரமமாக உள்ளது.

அதனால் பக்கவாட்டில் துளையிட்டு சிறுவனை எட்ட முயற்சிகள் தொடர்கின்றன. சிறுவனுக்கு உயிர்வாயு, தண்ணீர் ஆகியவற்றை மீட்புப் படையின் அனுப்ப முடிவதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.

சிறுவனைக் கிட்டத்தட்ட எட்டிவிட்டதாக அரசாங்கப் பேச்சாளர் குறிப்பிட்டார். அவன் காப்பாற்றப்பட்டவுடன் அவனை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல ஹெலிகொப்டர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுவன் பத்திரமாகக் காப்பாற்றப்பட வேண்டும் என்று நாடெங்கும் மக்கள் வேண்டுகின்றனர். வட ஆபிரிக்காவில் அந்த சிறுவனுக்கு இணையத்தளத்தில் ஆதரவு குவிந்து வருகிறது.

Related posts

வுஹான் நகரின் ஒரு பகுதி மீண்டும் திறப்பு

உணவுக்காக குழந்தைகளை விற்கும் அவலம்

ட்ரம்ப் இனது ‘TRUTH SOCIAL’