அரசியலமைப்பின் சிவில் பிரஜைகளின் பதவி காலம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதியுடன் முடிவடைந்ததன் பின்னர் கணக்காய்வாளர் நாயகத்துக்கான நியமனம் வழங்கப்படும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கடந்த ஆட்சியாளர்களை போன்றே செயற்படுகிறார் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுகள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன.
வழங்கிய எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. ஆளும் தரப்பின் உறுப்பினர்களும் பைத்தியம் போன்று செயற்படுகிறார்கள்.
தனது பல்கலைக்கழக நண்பனை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கணக்காய்வாளர் நாயகம் பதவியை வெற்றிடமாக்கியுள்ளார்.
உயர் பதவிகளுக்கான அனுமதி வழங்கும் அரசியலமைப்பு பேரவையின் மூன்று சிவில் பிரஜைகள் சிறந்தவர்கள் அவர்கள் அரசாங்கத்தின் நோக்கத்துக்கும் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் செயற்பட்டார்கள்.
ஜனாதிபதியின் பரிந்துரைகள் தவறாயின் அதனை தற்றுணிபுடன் இவர்கள் எதிர்த்தார்கள்.
கணக்காய்வாளர் நாயகமாக தனது பல்கலைக்கழக நண்பனை நியமிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவையின் சிவில் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து அந்த முன்மொழிவு இரத்துச் செய்யப்பட்டது.
அரசியலமைப்பின் சிவில் பிரஜைகளின் பதவி காலம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதியுடன் முடிவடைந்ததன் பின்னர் கணக்காய்வாளர் நாயகத்துக்கான நியமனம் வழங்கப்படும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கடந்த ஆட்சியாளர்களை போன்றே செயற்படுகிறார்.
அரசியலமைப்பு பேரவையின் சிவில் உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடைந்ததன் பின்னர் அரசாங்கத்துக்கு சார்பானவர்கள் அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார்கள்.
அதன் பின்னர் ஜனாதிபதி தனது நோக்கத்தை நிறைவேற்றுக் கொள்வார் என்றார்.
-இராஜதுரை ஹஷான்
