அரசியல்உள்நாடு

ஆலையடி குப்பை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – விவசாயிகளிடம் உறுதியளித்தார் தவிசாளர் மாஹிர்

சம்மாந்துறை ஆலையடிவட்டையில் கொட்டப்படும் குப்பைகளால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று (07) திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர் விஜயம் செய்ததுடன் விவசாயிகளுடனும் கலந்துறையாடினார்.

விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் விரைவில் தீர்வை பெற்றுதருவதாக தவிசாளர் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் உறுதியளித்திருந்தார்.

மேலும் இவ்விஜயத்தில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர் , சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.கே முஹம்மட் , சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக் றபீக் , ரிஸ்விகான் ,மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

-ஷாதிர் ஏ ஜப்பார்

Related posts

மே மாதம் சமர்பிக்கப்படவேண்டிய மின் கட்டண திருத்தம் எங்கே? தாமத்தப்படுத்துவதன் நோக்கம் என்ன? ஆணைக்குழு கேள்வி

கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை : அவசர நிலைமையில் சுகாதார தரப்பு ஒத்துழைப்பு

நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” ஐக்கிய குடியரசு முன்னணியின் முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு