உள்நாடு

ஆற்றை அகலப்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு) – அக்கரப்பத்தனை எல்பியன் ஆற்றை அகலப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் வெள்ளநீர் விவசாய பிரதேசங்களுக்குள் உட்புகுவதாகவும் ஆற்றுக்கு அண்மித்த வீடுகள் மற்றும் மக்கள் உடைமைகள் பாதிக்கப்படுவதாக பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினால் தனது அமைச்சின் பன்முகப்படுத்தபட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆற்றை அகலமாக்கும் நடவடிக்கை தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிற்கு புதிய பொறுப்பு

அடுத்த இருவாரம் முக்கியமானது

10 கிலோ கிராம் நாட்டரிசியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்