உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1,100 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,100 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 3,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் கடந்த 31ஆம் திகதி இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியுட்டாக பதிவானது.

நிலநடுக்கத்தின் தாக்கம் வேறு பல நாடுகளிலும் உணரப்பட்டிருந்தது.

இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மீண்டும் ஏவுகணை சோதனையில் இறங்கிய வடகொரியா

பைடனின் மற்றைய அடி ஆப்கானிஸ்தானுக்கு

உலக சுகாதார நிறுவனம் நியாயமற்று நடந்து கொள்கிறது – ட்ரம்ப்