ஆப்கானிஸ்தானில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
இவ்வனர்த்தங்கள் காரணமான சம்பவங்களில் 2,800 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டட இடிபாடுகள் மலைபோல சூழப்பட்டுள்ளதால், மீட்புக் குழுவினர் நுழைய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காயங்களுக்குள்ளான பலர், வைத்தியசாலைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பல வீதிகளில் தடைகள் ஏற்பட்டுள்ளதால், வான் வழியாகவும் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. மீட்புப் பணிகளில் பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டு ள்ளனர்.
இந் நிலையில் கட்டடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.