உலகம்

ஆப்கான் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி

(UTV|ஆப்கானிஸ்தான் ) – ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி (Ashraf Ghani) வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற்று சுமார் 5 மாதங்களின் பின்னரே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டின் சுதந்திர தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்ட தகவல்களின் அடிப்படையில், அஷ்ரப் கனி 50.64 வீத வாக்குகளை பெற்றுள்ளதுடன், எதிர்தரப்பு வேட்பாளரான அப்துல்லா அப்துல்லா (Abdullah Abdullah) 39.52 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் செப்டெம்பர் 28 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றதுடன், ஒக்டோபர் 19 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டது.

Related posts

Pfizer இற்கு தடுப்பூசிக்கு எதிராக வழக்கு

ரஷ்யாவில் 3 இலட்சம் பேருக்கு கொரோனா

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு