வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் வான்தாக்குதலால் அப்பாவி மக்கள் 21 பேர் உயிரிழப்பு

(UTV|AFGHANISTAN) ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் அரங்கேறி உள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

இதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது ஹாசிம் அல்கோஜாய் கூறும்போது, “ஒரு வான்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களும் 8-ந் தேதி இரவு நடந்துள்ளது” என குறிப்பிட்டார்.

 

 

 

 

Related posts

Peradeniya University Management Faculty closed

கொழும்பு நகரில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள குப்பை பிரச்சனை

மூதூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்