உள்நாடு

ஆன்லைன் முறையில் நிறுவன பதிவாளர் செயல்பாடுகள்

(UTV | கொழும்பு) – நிறுவனப் பதிவாளர் திணைக்களம் ஜூன் மாதத்தில் 9 நாட்கள் மட்டுமே இயங்கும் என நிறுவனப் பதிவாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாட்களில் திணைக்களம் மூடப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் திகதிகளில் நிறுவனப் பதிவாளரின் செயல்பாடுகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிறுவனங்களின் பதிவாளர் ஜூன் மாதம் 15,16,17,20,21,22,27,28,29 ஆகிய திகதிகளில் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வங்கிகளுக்கு விஷேட விடுமுறை

புதுப்பொழிவுடன் Amazon College & Campus சந்தைப்படுத்தல் காட்சியரை அங்குரார்ப்பணம்.