சூடான செய்திகள் 1

ஆனமாலு ரங்க கொலை : குடு ரொஷானின் சகோதரன் கைது

 

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு மாதம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக குடு ரொஷானின் இளைய சகோதரரான கொலின் டி சில்வா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று மாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முச்சக்கரவண்டியில் வந்த நபர்களினால், கூரிய ஆயுதம் மூலம் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த குறித்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில், ‘ஆனமாலு ரங்க’ எனும் 39 வயதான பாதாள குழு உறுப்பினர் ஒருவரும் 22 வயதான மற்றொரு நபரும் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

ETI நிறுவனத்திற்கு முன்னால் போராட்டம்; போக்குவரத்து தடை

நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

அரசின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்