உலகம்

ஆந்திரா விடுதியில் தீ விபத்து – கொரோனா நோயாளிகள் உட்பட 11 பேர் பலி

(UTV|இந்தியா) – இந்தியாவின், ஆந்திராவில் பகுதியில் கொரோனா பராமரிப்பு மையமாகப் பயன்படுத்தப்பட்ட தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆந்திர மாநிலம், விஜயவாடா நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியும் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தற்காலிக மருத்துவமனை மற்றும் பராமரிப்பு மையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அங்கு 22 நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இந்த விடுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து நோயாளிகளை உடனுக்குடன் வெளியேற்ற சுகாதாரப் பணியாளர்கள் முயற்சி செய்தனர். எனினும் தீ வேகமாகப் பரவியதில் நோயாளிகள் உள்ளிட்ட பலர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பலரை மீட்டனர். எனினும் 11 பேர் தீயில் கருதி உயிரிழந்தனர்.

இதேவேளை உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆந்திர அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

Related posts

சீனாவின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு

WhatsApp இற்கு புதிய வசதிகள்

பதவி நீக்கம் செய்யப்பட்ட ரஷ்ய அமைச்சர் தற்கொலை

editor