விளையாட்டு

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி

(UTV | கொழும்பு) –  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் சில அதிகாரிகளும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக அல்ஜசீரா செய்திச் சேவையினால் வௌியிடப்பட்ட செய்தி தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ள சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.

குறித்த செய்தியின் படி காணொளியில் ஆட்ட நிர்ணய கலந்துரையாடலில் ஈடுபட்டதாக கூறப்படும் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான தரிந்து மென்டிஸ், விளையாட்டு குற்றங்கள் தொடர்பான பொலிஸ் விசேட விசாரணை பிரிவில் நேற்று பிற்பகல் முன்னிலையாகி வாக்குமூலமொன்றை பெற்றுக் கொடுத்ததாக அதன் தலைவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகா தெரிவித்தார்.

Related posts

ஐசிசி-இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம்

இலங்கை அணி சுரங்க லக்மாலிடம்…

இலங்கை கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்து பயணம்