வகைப்படுத்தப்படாத

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

(UDHAYAM, COLOMBO) – உத்தரப்பிரதேசத்தில் ஆசைக்கு இணங்காத இளம்பெண்ணை தீயிட்டு கொளுத்திய இளைஞரை பொலிசார் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஷிகணேஷ்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனை நோட்டமிட்ட பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவர், கைப்பேசியை சார்ஜ் செய்வது போல வீட்டிற்குள் சென்று பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் அவரை தாக்கி கூச்சலிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அவரை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

கூக்குரலை கேட்டு இளம்பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இளம்பெண் துடிதுடித்து பலியானார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார், தப்பி ஓடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

Presidential Comm. report on SriLankan, Mihin tomorrow

State of Emergency extended

டி.ஐ.ஜி. வஸ் குணவர்தனவிற்கு 5 ஆண்டு கால சிறைதண்டனை