உள்நாடுபிராந்தியம்

ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (08) காலை மூதூர் வலய கல்வி அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஐந்து வருடங்களாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தி உத்தியோகத்ர்களாக கடமையாற்றுகின்ற தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரியே இவ் கவனயீஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலைகளில் சகல வேலைகளையும் தாம் செய்து வருகின்றோம்.

அதை வழி கடந்த அரசாங்கம் தமக்கான ஆசிரியர் நியமனத்தை வழங்குவதாக தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் நியமனம் வழங்கவில்லை. இதனையே இந்த அரசாங்கம் செய்கிறது.

எனவே பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோத்தர்களாக கடமையாற்றும் தங்களுக்கு இந்த அரசாங்கம் ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு – மாத்தளை மாநகர சபையின் அதிகாரம் NPP வசம்

editor

எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம்.

வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு