உள்நாடு

ஆசிரியர் சேவை சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

(UTV| கொழும்பு) – ஆசிரியர் மற்றும் அதிபர்கள் அடுத்த மாதம் மூன்றாம் திகதியின் பின்னர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு தனியான சம்பள திட்டத்தை தயாரிப்பதற்கும், அதுவரையில் இடைக்கால சம்பளத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த சம்பளத்தை அடுத்த மாதம் மூன்றாம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இல்லாவிடின் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கததின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

Dearo Agri நாட்டை அரிசி உற்பத்தியினால் தன்னிறைவடையச் செய்வதற்கான ‘ஒரே நோகத்துடன் வயல் நிலத்துக்கு’ கருத்திட்டத்துடன் இணைந்துச் செயற்பட தீர்மானம்

editor

இரு நாட்களில் டீசலுக்கான தட்டுப்பாடு நீங்கும்

பெரியநீலாவணைப் பகுதிகளில் அதிகரிக்கும் மணல் கடத்தல் சம்பவங்கள்!