அரசியல்உள்நாடு

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய வேலைகளைப் பெற்றுக் கொடுங்கள் – தயவுசெய்து இனிமேலும் ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச

நாட்டில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்த சமயத்தில், ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல ஆண்டுகளாக பல தியாகங்களைச் செய்து, 41 இலட்சத்துக்கும் மேலான பாடசாலை பிள்ளைகளுக்கு கல்வியைப் புகட்டினர்.

22,000 ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இவ்வாறு இலவசக் கல்வியை வலுப்படுத்தினர். இன்று, இவர்களில் 16,600 பேர் காணப்படுகின்றனர்.

ஏனையோர் விரக்தியில் விலகிச் சென்றுள்ளனர். இந்த அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த சமயம், தேர்தல் காலங்களில், இந்த ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைத்துக் கொள்வோம் என தீர்மானங்களை, வாக்குறுதிகளை மற்றும் உறுதிமொழிகளை வழங்கியது.

ஆனால் இன்று இந்த வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வேலையில்லாப் பட்டதாரிகள் இன்று (17) கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதி வழியிலான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு விஜயம் செய்து, அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எனவே, இந்த 16,600 பேருக்கும் ஆசிரியர் சேவையில் நிரந்தர நியமனத்தைப் பெற்றுக் கொடுங்கள். இது தொடர்பான மத்தியஸ்த தீர்மானத்தை அமுல்படுத்துங்கள்.

பல ஆண்டுகளாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், இந்த விடயத்தில் நாட்டுக்கு நகைச்சுவைகளை வழங்கிக் கொண்டிருக்காமல், உரிய நடவடிக்கை எடுத்து இவர்களை நிரந்தர தொழிலில் ஈடுபடுத்துங்கள்.

வாக்குறுதியளித்தபடி இவர்களுக்கு முறையான தொழில்களைப் மெற்றுக் கொடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களை ஏமாற்றி, இன்று ஆட்சிக்கு வந்த பிற்பாடு அவர்களை மறந்துவிட்டு செயற்பட்டு வருகின்றனர்.

தயவுசெய்து, இனிமேலும் இவர்களை ஏமாற்ற வேண்டாம். இந்த ஏமாற்று வேலையை நிறுத்துங்கள்.

இந்த ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு உரிய தொழில்கள் வழங்கப்படும் வரை, இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்குவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

16,600 ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் கருத்துத் தெரிவித்து, இவர்களுக்கான தீர்வைக் கோரினேன்.

மேலும், 35,000 வேலையில்லாப் பட்டதாரிகள் தொழிலற்றிருக்கின்றனர். இவர்கள் தொழில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

இவர்களுக்கு எவ்வாறேனும் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதே எனது நோக்கமென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

பொய்யுரைக்கும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் தமது வாக்குகளால் திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

ஜனாதிபதி அநுரவுக்கு மகாநாயக்க தேரர்கள் அவசர கடிதம்

editor

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் சஜித் பிரேமதாச

editor