அரசியல்உள்நாடு

ஆசிரியர்களாக பணி புரிந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மறந்து விட வேண்டாம் – சஜித்

இந்நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற போதங்களைப் பொருட்படுத்தாமல் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் பேரழிவுக்குப் பிறகு, நாட்டின் நீதிமன்றம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக அறவிட உத்தரவிட்டன. தற்சமயம், சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் பணம் செலுத்தும் செயல்முறையை நிராகரித்துள்ளது.

இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, நைட்ரிக் அமிலக் கசிவு காரணமாக, 81 கொள்கலன்களில் உயிருக்கு ஆபத்தான பிளாஸ்டிக் துகள்கள், அதிக அளவு அமிலம் கசிந்து சுற்றுச்சூழலில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.

“கட்டார் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இந்த கப்பல் வருகையை நிராகரித்தபோதும், நமது நாட்டு கடல்பரப்பினுள் பயணிக்க அனுமதியளித்ததைத் தொடர்ந்து பெரும் நஷ்டமே ஏற்பட்டது.

இன்றும் கூட, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே, இந்த பிரச்சினையில் நாம் ஒரு நாடாக ஒன்றிணைந்து இந்த நிறுவனத்திற்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டில் மாற்றுத்திறனாளிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

திருமதி என்.ஜி. கமலாவதி என்பவர் நீதிமன்ற நடவடிக்கை மூலம் 2025 செப்டம்பர் 19 ஆம் திகதி, நாட்டிலுள்ள 18 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்காக வேண்டி பெரும் வெற்றியை ஈட்டினார்.

மாற்றுத்திறனாளி பெண்கள் சங்கத்தின் தலைவராக, மஹவ முதல் வவுனியா வரையிலான ரயில் நிலைய புதுப்பித்தல் திட்டத்தை அவதானித்த போது, மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் நிலையங்களுக்கு பயணிக்கத் தேவையான பிரவேச வசதிகள் சரியாக திட்டமிடாமையால் பிரச்சினைகள் எழுகின்றன என்பதை அடையாளம் கண்டார்.

சிராவஸ்திபுர ரயில் நிலையம் போன்ற ரயில் நிலையங்களில் இந்த உரிமைகள் மீறப்பட்டுள்ளதால் ஜனாதிபதி, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கூட எதுவும் நடக்கவில்லை.

ஆகையால் அவர் நீதிமன்றத்திற்குச் சென்று இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டார். எனவே, நிர்மாணத் துறையில் உணர்வுபூர்வமாகச் செயல்பட்டு, மாற்றுத்திறனாளி சமூகத்திற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அம்பன்பொல கெட்டதிவுல்வெவ யானை சுரங்கப்பாதைப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுங்கள்.

அம்பன்பொல பிரதேச செயலாளர் பிரிவில், அம்பன்பொல மற்றும் கல்கமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் காசிகோட்டே கெட்டதிவுல்வெவ யானைகள் மாறும் இடத்தில் முதல் வனவிலங்கு சுரங்கப்பாதை 2024 மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், இன்று பணிகள் முடங்கிப்போயுள்ளன.

உலகப் புகழ்பெற்ற காவன்திஸ்ஸ மற்றும் மானாபரண உள்ளிட்ட யானைகளின் தாயகமாக இருக்கும் இந்தப் பகுதியில் உள்ள யானைகளின் பாதுகாப்பிற்காக இந்த சுரங்கப்பாதையை மீண்டும் அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.

ஆசிரியர்களாக பணி புரிந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மறந்து விட வேண்டாம்.

16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் நீதிமன்ற சமரசத் தீர்ப்பொன்று காணப்படுகின்றன. இத்தரப்பினர் பல ஆண்டுகளாக தியாகங்களைச் செய்து இலவசக் கல்வியைப் பாதுகாத்துள்ளனர்.

நாடு வங்குரோத்தடைந்து, கொரோனா காலத்தில் இலவசக் கல்விக்காக வேண்டி பல தியாகங்களுக்கு மத்தியில் இத்தரப்பினர் நமது கடமைகளை நிறைவேற்றினர்.

அன்று கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட காலப்பிரிவில் இப்பிரச்சினைகள் எழாவிட்டாலும், இன்று இது ஒரு பிரச்சினையாக அமைந்து காணப்படுகின்றன. நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தவறிவிட்டது.

இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாக எதிர்க்கட்சியில் இருந்தபோது எழுப்பிய குரல்களை அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆளும் தரப்பாக இருந்து வரும் தற்போதைய அரசாங்கத்தினர் இதனைச் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்சார சபை ஊழியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்.

23,000 மின்சார சபை ஊழியர்களை அன்று வீதிகளில் இறக்கிய தற்போதைய ஆளும் தரப்பினர், இன்று அரசாங்கத்தைப் பாதுகாக்க இலட்சக்கணக்கான மக்களை கொல்லவும், உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக சொல்கின்றனர்.

23,000 பேரின் தொழிலை பாதுகாக்கும் அதே வேளையில் தான் இந்த மின்சார சபை மறுசீரமைப்பு நடக்க வேண்டும்.

அண்மைய சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பின் போது, ​​ஐக்கிய மக்கள் சக்தி கூட இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொழிலைப் பாதுகாத்த வண்ணமே மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்று சுட்டிக்காட்டியது. ஊழியர்களை மறந்துவிட்டு இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

NBRI நிறுவனத்துக்கு சட்ட ரீதியாக புதிய பக்க பலம் பெற்றுக் கொடுக்கப்பட்டமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

NBRI நிறுவனத்துக்கு புதிய பக்கபலம் சட்ட ரீதியாக பெற்றுக் கொடுக்கப்படும் இச்சந்தர்ப்பத்தில், புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளை ஆரம்பித்து வைத்த ரஞ்சித் மத்தும பண்டார அவர்களுக்கும், சாமசர கந்த நிலச்சரிவு துயரத்தில் சேதமான வீடுகளுக்கு 35 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை நன்கொடையாக வழங்கியதற்காக கபீர் ஹாஷிம் குடும்பத்தினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Related posts

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தோம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

editor

சீனத் தூதுக்குழுவினர் இலங்கை விஜயம்

மூதூரில் பஸ் விபத்து – 30க்கும் மேற்பட்டோர் காயம்.