உள்நாடு

ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் – ஜனாதிபதி இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) –  ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொதுச் செயலாளருமான ஜே ஷா இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

ஆசிய கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திரு.ஜாவோ மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 40 பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related posts

ராஜிதவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மைத்திரியின் வாக்குமூலப் பதிவு 7 அல்லது 8 [VIDEO]

மத்தளவிலிருந்து 160 பணியாளர்கள் தென் கொரியா பயணம்