உள்நாடு

அஹ்னாஃப் இனை விடுவிக்குமாறு மனித உரிமை குழுக்கள் இலங்கைக்கு வலியுறுத்தல்

(UTV | கொழும்பு) –  பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமறு பல மனித உரிமை அமைப்புகள் இலங்கை அரசாங்கத்துக்கு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

சர்வதேச மன்னிப்பு சபையும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 13 மனித உரிமை அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை கூட்டாக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அஹ்னாஃப் ஜஸீம் இன் கைது குறித்து கவலை வெளியிட்டுள்ளதுடன், ஆழ்ந்த குறைபாடுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.


இது குறிப்பாக இலங்கை சிறுபான்மையினரின் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது.

26 வயதான அஹ்னாஃப் ஜசீம் கவிஞர் மற்றும் ஆசிரியர் ஆவார், அவர் இலங்கையின் கடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 மே 16 அன்று கைது செய்யப்பட்டார்.

அவர் தமிழில் எழுதிய ஒரு கவிதை புத்தகத்தில் “தீவிரவாதம்” குறித்த சிந்தனைகளும் கருத்துகளும் பொதிந்திருந்ததாகவும், அந்த நூலானது புத்தளத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இளைஞர்கள் மத்தியில் அவை பரப்பப்பட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்ட நிலையில் கைதானார்.

1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் இலங்கை காவல்துறையின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உத்தரவின் பேரில் அஹ்னாஃப் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அஹ்னாஃப் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் வரை அல்லது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம்.

தற்போது அவர் காலவரையின்றி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் மற்றும் பிரதிநிதித்துவத்திற்கான குறைந்த அணுகலுடன் மட்டுமே உள்ளார்.

Related posts

சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் – விஜேதாச ராஜபக் ஷ

பவி தொடர்பில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

editor