உள்நாடு

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை நாளை மறுநாள் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

11,201,647,000.00 ரூபாய் தொகை 1,412,574 பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் அஸ்வெசும நிவாரண உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரொனோ – முகமூடிகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேர் கைது

கட்சி செயலாளர்களுடன் சஜித் இரகசிய பேச்சு – கொழும்பு மாநகரசபை உட்பட எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை பெற்றுள்ள மன்றங்களில் நிச்சயம் ஆட்சியமைப்போம் – ரஞ்சித் மத்தும பண்டார

editor