உள்நாடுவிசேட செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

அஸ்வெசும முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களுக்கான நலன்புரி நன்மைகளை இன்று (28) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

2026 ஜனவரி மாதத்திற்கான முதலாவது கட்ட அஸ்வெசும நன்மைகளைப் பெறும் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 1,415,584 ஆகும்.

இதற்காக அரசாங்கம் 11,234,713,750.00 ரூபா நிதியைச் செலவிட்டுள்ளதுடன், இரண்டாவது கட்ட அஸ்வெசும நன்மைகளைப் பெறும் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 248,454 ஆகும்.

அதற்காக அரசாங்கம் 2,235,137,500.00 ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5000 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு அநீதி: களமிறங்கிய முஸ்லிம் சட்டத்தரணிகள்

நாட்டை முழுமையாக மீட்டெடுக்க தகுதியான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் – ரிஷாட் எம்.பி

editor