வகைப்படுத்தப்படாத

அவுஸ்ரேலிய ஆளுநர் இல்லத்தில் ஜனாதிபதிக்கு உயரிய வரவேற்பு

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை வரவேற்பதற்கான விசேட வைபவம் அந்நாட்டு ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் (Government  House) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரச தலைவர் ஒருவருக்கான அவுஸ்ரேலியாவின் உத்தியோகபூர்வ அழைப்பை நினைவுகூரும் வகையில் அவுஸ்ரேலியாவிற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்தார். ஜனாதிபதியை Sir Peter Crosgrove  மற்றும் அவரது பாரியார் அன்புடன் வரவேற்றனர்.

21 மரியாதை வேட்டுக்கள் சகிதம் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு மிக உயரிய வரவேற்பு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டதுடன் இருநாட்டு தேசிய கீதங்களும் இதன்போது இசைக்கப்பட்டன.

இருநாட்டு தேசிய கொடிகளினாலும் ஆளுநர் இல்ல வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வரவேற்பு வைபவத்தின் பின்னர் ஆளுநரால் வழங்கப்பட்ட விசேட விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இணைந்துகொண்டனர்.

Related posts

Fmr. Defence Secretary Arrested

சுனாமி – சூறாவளி வதந்நிகளே – இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியஷர்சன யாப்பா

கேரளா மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 187 ஆக உயர்வு