உலகம்

அவுஸ்தி​ரேலியாவில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV |  அவுஸ்தி​ரேலியா) – அவுஸ்தி​ரேலியாவின் மெல்பர்ன் நகர் உள்ளிட்ட தென்கிழக்கு பிராந்தியத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

விக்டோரியா மாநிலத்தின் தலைநகரை அண்மித்த மென்ஸ்பீல்ட் பகுதியில், உள்ளூர் நேரப்படி காலை 9.15 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சில கட்டிடங்கள் சேதமடைந்தமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளன.

தொடர் நடுக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு விக்டோரியா மாநில அவசர சேவை பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

சீனாவில் மீளவும் ஊரடங்கு

காசா போரினால் உலகமே தனது நாட்டை மறந்துவிட்டது – உக்ரைன் ஜனாதிபதி.

ஈரான் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!