விளையாட்டு

அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேவிட் வோர்னருக்கு சத்திர சிகிச்சை

(UTV|AUSTRALIA)-அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேவிட் வோர்னருக்கு சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில், விளையாடி வந்தார்.

இதன்போது துடுப்பாடிய போது தனது முழங்கையில் காயமடைந்தார்.

இந்தநிலையில், நாளைய தினம் அவருக்கு, முழங்கையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் சில நாட்கள் ஓய்வு பெறவேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அணி வீரர்களான, டெவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மீத் ஆகியோர் கடந்த வருடம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றின் போது, பந்தின் தன்மையை மாற்றிய குற்றச்சாட்டில் அவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் ஒரு வருடம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் உள்ளுர் போட்டிகளில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இங்கிலாந்தை எதிர்கொண்டு அரையிறுதியில் கால்பதித்த அவுஸ்திரேலியா

குசல் மற்றும் நிரோஷனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

உடற்கட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமில முனசிங்ஹவுக்கு ஜனாதிபதி வாழ்த்து