உலகம்

அவுஸ்திரேலியா சிட்னியில் துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு – 29 பேர் காயம் – துப்பாக்கிதாரியின் பெயர் வௌியானது

அவுஸ்திரேலியா, சிட்னியின் பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல தகவல்களைக் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அதற்கமைய, இத்தாக்குதல்களுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் சிட்னி நகரின் தென்மேற்குப் பகுதியில் வசித்து வந்த நவீட் அக்ரம் (Naveed Akram) என்பவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், அவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரா அல்லது தற்போது கைது செய்யப்பட்டுள்ளவரா? என்பது குறித்துக் குறிப்பிடப்படவில்லை.

குறித்த துப்பாக்கிச் சூடு யூதர்களின் கொண்டாட்ட நிகழ்வொன்றின் மீதே நடத்தப்பட்டுள்ளது.

தற்போது இத்துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரி ஒருவரும் அடங்குகிறார்.

இரண்டு துப்பாக்கிதாரிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் பொலிஸ் காவலில் உள்ளார்.

Related posts

ஈரான் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும் புதிய சட்டமூலம்!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor

ஹமாஸ்-இஸ்ரேல் போர்: நான் விட்டிருக்க மாட்டேன்-ஜோ பைடனை விமர்சிக்கும் டிரம்ப்