உலகம்

அவுஸ்திரேலியாவில் 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ

(UTV|COLOMBO) – அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை அணைக்க ஏறத்தாழ 3000 தீயணைப்பு வீரர்கள் களத்தில் உள்ளனர்.

தென் கிழக்கு அவுஸ்திரேலியாவில் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்வதுடன், இன்று 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமையை ‘ஆபத்தான நாள்’ என்றும் கூறி உள்ளனர்.

காட்டுத்தீ பற்றி எரியும் பகுதிகள் அருகே இருக்கும் மக்களை வெளியேற நியூ சவூத் வேல்ஸ் பிரிமீயர் கிளாடிஸ் வலியுறுத்தி உள்ளார்.

காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போய் உள்ளனர், 1300 வீடுகள் தீக்கிரையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம், குறைவான ஈரப்பதம், பலத்த காற்று, இவைதான் இப்போதைய சூழலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

Related posts

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

நடிகை குஷ்பு கைது

பிரதமர் கொலை முயற்சி : 14 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை