உள்நாடுசூடான செய்திகள் 1

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய 98 பேர்

(UTV|கொழும்பு)- அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த மேலும் 98 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் – 605 எனும் சிறப்பு விமானம் ஊடாக அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை குறித்த பயணிகள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்துள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்றும் சமையல் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ

PHI பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

குணமடைந்தோர் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு