அவிசாவளை கிரிவந்தல பகுதியில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 18 பேர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகளை ஏற்றிச் செல்ல நின்ற பஸ் மீது பின்னால் வந்த பஸ் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை மோசமாக இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.