(UTV | கொழும்பு) – தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சந்தர்ப்பத்தில் அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
